Desc: நூல் அறிமுகம்
இன்று, அவர் தெய்வம்.
4000 வருடங்களுக்கு முன்பு, வெறும் மனிதன்.
வேட்டை ஆரம்பம். அருமை நண்பன் ப்ரஹஸ்பதியை வஞ்சகமாகக் கொன்ற கொடூர நாகா, இப்போது மனைவி சதியையும் பின்தொடர்கிறான். தீமையை ஒழிக்கப்போகின்றவர் என்று ஆருடம் கூறப்பட்ட திபேத்திய அகதி சிவா, தன் அரக்கத்தனமான எதிரியை அழிக்கலாம் விடப்போவதில்லை. ஒன்று மட்டும் நிச்சயம்: பழிவாங்க வேண்டும் என்ற அவரது துடிப்பும், தீமையின் பாதையும், நாகர்களின் வாயிலுக்கே அவரை இட்டுச் செல்லும்.
தீயசக்திகளின் அராஜகமோ, நாளுக்கு நாள் வெட்டவெளிச்சமாகி வருகிறது; அதன் ஊடுருவல் உலகின் எல்லை வரை பாய்ந்துவிட்டது. அபூர்வ மருந்து ஒன்று கிட்டாத காரணத்தால் பணயக் கைதியாக ஒரு நாடே கிடக்கும் அவலம். பட்டத்து இளவரசன் ஒருவனின் அகால துர்மரணம். சிவனுக்கு இதுவரை உருதுணையாய் இருந்து, தத்துவ மார்கத்தில் வழிநடத்தி வந்த வாசுதேவர்கள், இப்போது தீமையின் பக்கம் நிற்கின்ற கொடுமை. உலகின் மிகச் சிறந்த, ஒப்புவமையில்லாத மெலூஹப் பேரரசும் தப்பவில்லை; அதன் ஆதாரமான மயிகாவில் ஒரு பயங்கர உண்மை புதைந்துள்ளது. சிவன் அறியாமல், கண்ணுக்குத் தெரியாத ஒருவர், மாயத்திரைக்குப் பின்னாலிருந்து, எல்லோரையும் ஆட்டி வைக்கிறார்.
காலங்காலமாய்ப் புதைக்கப்பட்ட கேள்விகளுக்கு விடை தேடி, பண்டய இந்தியாவின் முடியிலிருந்து அடிவரை பயணித்து, ஒன்றன்பின் ஒன்றாய்ப் பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் சிவனிற்கு, ஒன்று மட்டும் நன்றாய்ப் புரிகிறது: கண்ணால் பார்ப்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய். இங்கே எல்லாவற்றுக்கும் ஒரு மாயத் தோற்றம் உண்டு.
கடுமையான போர். அதிசயக் கூட்டணிகள். படிப்போரை அதிசயத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் இரகசியங்கள்; அவற்றின் அபூர்வ வெளிப்பாடுகள். இவையனைத்தும், மெலூஹாவின் அமரர்களுக்குப் பின் வரும், சிவா முத்தொகுதியின் இரண்டாவது பகுதியான, விற்பணையில் சாதனை படைத்த இப்புத்தகத்தில் கிடைக்கும். |